உத்திரமேரூரில் 8 புதிய பஸ்கள் இயக்கம்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில், பழைய பேருந்துக்கு பதிலாக, புதிய பேருந்துகளை இயக்கும் நிகழ்ச்சி நடந்தது.காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்தார்.அதில், காஞ்சிபுரம், திருச்சி, திருப்பதி, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு, பழைய பேருந்துகளுக்கு பதிலாக, புதிதாக எட்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், போக்குவரத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.