மேலும் செய்திகள்
கலைத்திருவிழா போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு
18-Oct-2025
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பல்லவர் டேக்வாண்டோ அமைப்பு சார்பில், காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த 'பிளாக் பெல்ட்' எனப்படும் கருப்பு பட்டைக்கான தகுதி போட்டி தேர்வில், எட்டு மாணவ - மாணவியர் வெற்றி பெற்றனர். காஞ்சிபுரம் பல்லவர் டேக்வாண்டோ அமைப்பு சார்பில், 'பிளாக் பெல்ட்' எனப்படும் கருப்பு பட்டைக்கான தகுதி போட்டி தேர்வு அமைப்பு செயலர் கணேஷ் பயிற்றுநர்கள் அஜித்குமார், கமல், சரத், யுவஸ்ரீ தலைமையில் நேற்று நடந்தது. இதில், 28 மாணவ - -மாணவியர் போட்டியில் பங்கேற்றனர். இதில், எட்டு மாணவ - மாணவியர் கருப்பு பட்டை பெற தகுதி பெற்றனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டாக்டர் செல்வகுமார் தகுதி பெற்ற மாணவ - மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ், நினைவு பரிசு மற்றும் கருப்பு பட்டை அணிவித்து கவுரவித்தார்.
18-Oct-2025