இளங்காளி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் விமரிசை
உத்திரமேரூர் :உத்திரமேரூர் தாலுகா, அகரம் தூளி கிராமத்தில், இளங்காளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், இவ்வாண்டிற்கான சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நேற்று நடந்தது.முன்னதாக, காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு நெய், பால், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு குளக்கரையில் இருந்து 108 பால்குட ஊர்வலம் தொடங்கியது. தொடர்ந்து, விரதமிருந்து பால் குடம் எடுக்கும் பக்தர்கள், வலம்புரி விநாயகர் கோவில் தெரு வழியாக, இளங்காளி அம்மன் கோவிலை சென்றடைந்தனர்.பின், பக்தர்கள், பால் குடங்களை அம்மன் மீது ஊற்றி அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு, சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டு சென்றனர்.