உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வட்டம்பாக்கத்தில் எலும்புக்கூடாக காட்சியளிக்கும் மின்கம்பம்

வட்டம்பாக்கத்தில் எலும்புக்கூடாக காட்சியளிக்கும் மின்கம்பம்

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், வட்டம்பாக்கம் ஊராட்டசியில் 2,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்கு, வட்டம்பாக்கம் பிரதான சாலையோரம் மின்கம்பங்கள் வழியாக மின் வழித்தடம் செல்கின்றன.இதில், சில மின்கம்பங்கள் சேதடைந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளன. மின் கம்பத்தின் சிமென்ட் காரை உதிர்ந்து, இரும்பு கம்பி வெளியில் தெரியும் நிலையில் உள்ளது.விழும் நிலையில் மின்கம்பம் உள்ளதால், பிரதான சாலையோரம் செல்லம் வாகன ஓட்டிகள், அச்சத்துடன் சென்று வருகின்றனர்.இதானல், அப்பகுதி முழுதும் மின்தடை ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, மின்வாரிய உயர் அதிகாரிகள் அபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்திஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ