உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

சாலையில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

உத்திரமேரூர், -நெல்வாய், மங்கலம் பகுதிகளில் சாலையிலே திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றனர். நெல்வாய், மங்கலம் கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அதனுடன் விவசாயிகள் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதில், பால் கரக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் மாடுகள் அவிழ்த்து விடப்படுகின்றன. அவ்வாறு அவிழ்த்து விடப்படும் மாடுகள் சாலையிலேயே சுற்றி திரிகின்றன. சாலையிலே சுற்றித் திரியும் மாடுகளால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி