மேலும் செய்திகள்
தட்டாம்பூண்டி சாலையை சீரமைக்க கோரிக்கை
12-Jun-2025
உத்திரமேரூர்:மருதம் ஏரிக்கரை சாலையோரத்தில் படர்ந்துள்ள முட்செடிகளால் வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் உள்ளனர்.உத்திரமேரூர் ஒன்றியம், மருதம் கிராமத்தில் ஏரிக்கரை சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிவாசிகள் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.இந்த சாலை நீண்ட ஆண்டுகளாக மண் சாலையாகவே இருந்து வந்தது. 2024ம் ஆண்டு, 22.56 லட்சம் ரூபாய் செலவில், இச்சாலை கப்பி சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது.தற்போது, ஏரிக்கரை சாலை முறையாக பராமரிப்பு இல்லாமல், சாலையோரத்தில் கருவேல முட்செடிகள் படர்ந்து வளர்ந்து உள்ளன. இந்த முட்செடிகளின் கிளைகள் சாலையை ஆக்கிரமித்து வருகின்றன.மேலும், முட்செடிகளின் கிளைகளில் உள்ள முட்கள் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே, மருதம் ஏரிக்கரை சாலையோரத்தில் படர்ந்துள்ள கருவேல முட்செடிகளை அகற்ற, துறை அதிகாரிகள் நடவடிக்கை, எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12-Jun-2025