உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாத்துார் சர்வீஸ் சாலையில் கட்டட கழிவுகள் குவிப்பு

மாத்துார் சர்வீஸ் சாலையில் கட்டட கழிவுகள் குவிப்பு

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்காகன வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் , ஒரகடம் அடுத்த மாத்துாரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.இந்த நிலையில், போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருந்து அகற்றப்படும் கட்டட கழிவுகள், மாத்துார் அரசு பள்ளி பேருந்து நிறுத்தம் அருகிகே, சர்வீஸ் சாலையில் கொட்டப்பட்டுள்ளது.இதனால், சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதோடு, நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் கட்டட கழிவுகளால் விபத்துகளும் நடக்கிறது.எனவே, சர்வீஸ் சாலையில் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளை அகற்றி, தொடர்ந்து இது போன்ற அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் மீது, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ