உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அங்கன்வாடி மையம் காஞ்சியில் திறப்பு

அங்கன்வாடி மையம் காஞ்சியில் திறப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்டபுரம் தெருவில், புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி பள்ளி அருகில், 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் இயங்கி வந்ததது. பழமையான இக்கட்டடம் சிதிலமடைந்து இருந்தால், புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, புதிய கட்டடம் கட்டுவதற்கு காஞ்சிபுரம் கலெக்டரின் அனுமதி பெறப்பட்டு மொபிஸ் இந்தியா நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி மற்றும் தி பிரிட்ஜ் நிறுவனத்தின் மூலம் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் தலைமை வகித்தார். மொபிஸ் இந்தியா நிறுவன சமூக பாதுகாப்பு திட்ட மேலாளர் நரசிம்மன், திபிரிட்ஜ் நிறுவனத்தின் நிறுவனர் மதிவாணன், ராஜேஷ் ஆகியோர் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர். இவ்விழாவில், காஞ்சிபுரம் நகர்ப்புற குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக மேற்பார்வையார்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை