சுற்றுச்சுவர் இல்லாத அங்கன்வாடி மையம் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி
ஸ்ரீபெரும்புதுார் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.தனியார் தொண்டு நிறுவனம் வாயிலாக, குடிநீர் வசதி, அங்கன்வாடி மையத்தை சுற்றி பாதுகாப்பு இரும்பு வலை கட்ட புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இந்நிலையில், அங்கன்வாடி மையம் வாயிலையொட்டி, மழைநீர் வடிகால் கட்டும் பணிக்காக, பென்சிங் செய்யப்பட்டிருந்த இரும்பு வலை அகற்றப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில், அங்கன்வாடி மையம், பாதுகாப்பற்ற முறையில் சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது.இதனால், அங்கன்வாடி மையம் வளாகத்தில் விளையாடும் குழந்தைகள், மழைநீர் வடிகாலில் விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.