உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி சிவன் கோவில்களில் வரும் 15ல் அன்னாபிஷேகம்

காஞ்சி சிவன் கோவில்களில் வரும் 15ல் அன்னாபிஷேகம்

காஞ்சிபுரம்:ஐப்பசி மாத பவுர்ணமியன்று, சிவன் கோவில்களில் மூலவருக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சிவலிங்கத்தை அன்னம் மற்றும் காய்கறி, பழ வகைகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு ஆராதனை செய்வதையே அன்னாபிஷேகம் என, அழைக்கப்டுகிறது.அன்ன அலங்காரத்தில் அருள்பாலிக்கும் சிவ பெருமானை வழிபட்டால், வீட்டில் உணவுக்கு பஞ்சம் இருக்காது, 1 கோடி சிவலிங்கத்தை வழிபட்ட பலன் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதன்படி, ஐப்பசி மாத பவுர்ணமியான வரும் 15ல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடக்கிறது.இதில், காஞ்சிபுரம், காந்தி சாலை வழக்கறுத்தீஸ்வரர் கோவில், திருக்காலிமேடு சத்யநாதசுவாமி, திம்மராஜாம்பேட்டை ராமலிங்கேஸ்வரர், தாமல்வார் தெரு ஜலகண்டேஸ்வரர், மேலச்சேரி வேதபுரீஸ்வரர், எடமச்சி முத்தீஸ்வரர், கிளார் அகத்தீஸ்வரர் உள்ளிட்ட பல சிவன் கோவில்களில் வரும் 15ம் தேதி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.இதில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர், காமராஜர் வீதி சித்தீஸ்வரர், பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெரு தென்கோடி ருத்ரகோட்டீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் அஸ்வினி நட்சத்திரத்தையொட்டி நாளை மாலை அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ