உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 276 தற்காலிக பணியிடங்கள் மருத்துவத் துறையில் அறிவிப்பு

276 தற்காலிக பணியிடங்கள் மருத்துவத் துறையில் அறிவிப்பு

காஞ்சிபுரம்:பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் தேசிய நலக்குழுமம் சார்பில், மாவட்ட நலச்சங்கம் வாயிலாக காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.உணவு நிபுணர், பல் சுகாதார நிபுணர், மருந்தாளுனர், துப்புரவு பணியாளர், செவிலிய உதவியாளர், சமையலர், ஓட்டுனர், ரத்த வங்கி ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு வகையிலான பணிகளுக்கு, 276 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது எனவும் வரும் காலங்களில் பணி வரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது. இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விபரங்களுக்கு, https://kanchipuram.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்து சுயசான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன், வரும் 20க்குள், நிர்வாக செயலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 42ஏ, ரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்பலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ