உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஸ்ரீபெரும்புதுாரில் மீண்டும் துணிகரம் :வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன், 200 கிராம் வெள்ளி, பணம் திருட்டு

ஸ்ரீபெரும்புதுாரில் மீண்டும் துணிகரம் :வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன், 200 கிராம் வெள்ளி, பணம் திருட்டு

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் மீண்டும் வீட்டின் பூட்டை உடைத்து, 9 சவரன் தங்கம், 200 கிராம் வெள்ளி, 24,500 ரூபாய் பணம் திருடப்பட்டு உள்ளது.ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி, திருமங்கையாழ்வார் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 32; ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி சுதா, அதே பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருகிறார். தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம், கார்த்திகேயன் வேலைக்கு சென்ற நிலையில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, சுதா, வீட்டை பூட்டிக் கொண்டு பேக்கரிக்கு சென்றார்.இதையடுத்து, மாலை 4;00 மணிக்கு வேலையில் இருந்த திரும்பிய கார்த்திகேயன், பேக்கரியில் இருந்த மனைவியுடன் வீட்டுக்கு சென்றார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் கதவுகள் திறந்திருப்பதை கண்டார்.இதையடுத்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பிரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 9 சவரன் தங்க கம்பல், 200 கிராம் வெள்ளி கொலுசு, 24,500 ரூபாய் பணம் உள்ளிட்டவை திருடப்பட்டிருப்பது தெரிந்தது.இது குறித்து, கார்த்திகேயன், ஸ்ரீபெரும்புதுார் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' கேமராவை பார்த்து விசாரித்து வருகின்றனர்.சில நாட்களுக்கு முன், ஸ்ரீபெரும்புதுாரைச் சேர்ந்த முத்துபெருமாள், 47; என்பவரின் வீட்டின் முன்புற கதவை உடைத்து, பீரோவில் இருந்த 129 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள், 21 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ