மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்
10-Jul-2025
காஞ்சிபுரம்:மாற்றுத்திறன் நியமன உறுப்பினராக தேர்வு செய்வதற்கு, வரும் -31ம் தேதி வரையில் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரு மாவட்ட ஊராட்சி, ஐந்து ஊராட்சி ஒன்றியம், 274 கிராம ஊராட்சிகளில், தலா, ஒரு மாற்றுத்திறனுடைய நபர்களை நியமன உறுப்பினராக தேர்வு செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்குரிய விண்ணப்பப்படிவம், www.kancheepuram.nic.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து நாளை மறுதினத்திற்குள் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.தற்போது, மனு தாக்கல் செய்யும் தேதி வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே, கிராம ஊராட்சிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அந்தந்த கிராம ஊராட்சிகளை நிர்வகிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், ஒன்றியத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, அந்தந்த வட்டார நிர்வாகத்தை நிர்வகிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், மாவட்ட ஊராட்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மாவட்ட ஊராட்சி செயலரிடம் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10-Jul-2025