உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தபால் சேவை மையம் துவங்க விண்ணப்பம் வரவேற்பு

தபால் சேவை மையம் துவங்க விண்ணப்பம் வரவேற்பு

காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில், தபால் சேவை மையம் துவங்குவதற்கு விண்ணப்பம் வரவேற்பதாக, அஞ்சல் கோட்ட அலுவலகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, காஞ்சி புரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தின் கட்டுப்பாட்டில், அஞ்சல் சேவைகள் இல்லாத இடங்களில், தபால் தலைகள் விற்பனை, துரித அஞ்சல் முன்பதிவு, மணியார்டர் அனுப்புவது உள்ளிட்ட தபால் சேவை மையங்கள் துவங்குவதற்கு, தனிநபர் மற்றும் அமைப்புகளில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கேற்ப வாகனங்கள், அலுவலக கட்டடம் மற்றும் அலுவலகம் இயங்குவதற்கு ஏற்ப முதலீடு செய்து அஞ்சல் சேவை செய்ய விரும்புவோர் அஞ்சல் கோட்ட அலுவலகங் களில் படிவங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும், https://utilities.cept.gov.on/DOP/view uploads.aspx?uid=10 என்ற அதிகார பூர்வமான இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, ஆக., 9ம் தேதிக்குள் அஞ்சல் கோட்ட அலுவலகம், காஞ்சி புரம் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு 044-- - -2722 2901 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை