உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கலை திருவிழாவில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

கலை திருவிழாவில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. இதில் பட்டா, ரேஷன் அட்டை, ஆக்கிரமிப்பு, உதவித்தொகை என, 365 பேர் மனு அளித்தனர்.இதில், 2024 - -25ம் ஆண்டுக்கான கலை திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கி கலெக்டர் பாராட்டினார்.இக்கூட்டத்தில், ஹிந்து இறை தொண்டர்கள் சங்கம் சார்பில் பிரபாகரன் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:பூசாரிகள் ஓய்வூதியம் சம்மந்தமாக கிராம கோவில் பூசாரிகள் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள விதிமுறைகளில் சில தளர்வுகளை அரசு அறிவிக்க வேண்டும். ஆண்டு வருமான உச்ச வரம்பை 72,000 ரூபாயில் இருந்து 2 லட்சமாக அறிவிக்க வேண்டும்.மேலும், 60 வயது கடந்த பூசாரி ஒவ்வொரு அதிகாரியாக சந்தித்து அனுமதி பெறுவது மிகவும் சிக்கலாக உள்ளது. எனவே நலவாரியத்தின் பதிவு இணையவழியில் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க வழிவகை செய்ய வேண்டும்.ஓய்வூதியம் பெறும் வயது வரம்பை 55 ஆக குறைக்க வேண்டும். ஓய்வூதியம் 4,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி