| ADDED : ஜன 24, 2024 09:54 PM
புள்ளலுார்:காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார் கிராமத்தில், அரங்கநாதபுரம் துணை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களின் இறந்தவர்களை புதைக்கவும், எரிப்பதற்கும் அய்யனேரி ஏரிக்கரை ஒட்டி சுடுகாடு உள்ளது.இந்த சுடுகாட்டில் ஈமச்சடங்கு செய்வதற்கு, கை பம்பு போட்டனர். இது, சில மாதங்களில் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. அதன்பின், பழுதடைந்து காட்சிப்பொருளாக மாறி உள்ளது.மேலும், சுடுகாட்டிற்கு போதிய சுற்றுச்சுவர் வசதி இல்லை என, அப்பகுதி மக்கள் இடையே புலம்பல் ஏற்பட்டுள்ளது. இதனால், புள்ளலுார் ஏரி தண்ணீர் மற்றும் பம்பு செட் தண்ணீரை பிடித்து வர வேண்டி உள்ளது.எனவே, புள்ளலுார் அரங்கநாதபுரம் கிராம சுடுகாட்டிற்கு அடிப்படை தேவையான கைப்பம்பு பழுது நீக்கி ஈமச்சடங்கிற்கு தேவையான தண்ணீரை வழங்க வேண்டும் மற்றும் சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.