மேலும் செய்திகள்
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்
14-Oct-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில், பரமேஸ்வர விண்ணகரம் என அழைக்கப்படுகிறது. தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள இக்கோவில் கும்பாபிஷேகம் கடைசியாக கடந்த 2007ம் ஆண்டு நடந்தது.இந்நிலையில், இக்கோவிலில் இந்திய தொல்லியல் துறை வாயிலாக, திருப்பணி மேற்கொள்வதால், நேற்று முன்தினம் பாலாலயம் நடந்தது. இதனால், மூலவர் தரிசனம் கிடையாது.ஆகம விதிகளுக்கு உட்பட்ட பூஜைகள் நடைபெறும். மூலவர் பாலாலயம் செய்யப்பட்டு உள்ளதால், உற்சவர் தரிசனம் மட்டும் வழக்கம்போல் நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
14-Oct-2024