மேலும் செய்திகள்
பழையசீவரம் சாலையோரம் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள்
02-Nov-2024
வாலாஜாபாத்:வாலாஜாபாத் -- செங்கல்பட்டு சாலையில், பழையசீவரம் மற்றும் உள்ளாவூர் பகுதியில், ஆட்டோ தொழிலாளர்கள் நல சங்கம் உள்ளது. இப்பகுதிகளைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள், வாலாஜாபாத்தில் இருந்து, பழையசீவரம் மலை வழியாக உள்ளாவூர் கேட் வரை ஆட்டோ இயக்கி பயணியரை ஏற்றி செல்கின்றனர்.இதனிடையே, உள்ளாவூர் பேருந்து நிலையம் அருகே, அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்கள் நேற்று ஆட்டோக்களுக்கு பூஜை போடும் விழா மற்றும் புதிய ஆட்டோக்கள் இணைப்பு விழா நடத்த திட்டமிட்டு இருந்தனர்.இதற்காக அப்பகுதியில் ஆட்டோ நல சங்கத்திற்கான பெயர் பலகை புதிதாக அமைத்திருந்தனர். இந்நிலையில், அச்சங்க பெயர் பலகையை பழையசீவரம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பு ஆட்டோ தொழிலாளர்கள் அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.இதையடுத்து, உள்ளாவூர் பகுதி ஆட்டோ தொழிலாளர்கள், தங்களது நல சங்க பலகையை அப்புறப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மீண்டும் அதே இடத்தில் சங்க பெயர் பலகையை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதியில், சாலை மறியல் போரட்டத்திற்கு நேற்று தயாராகினர்.மேலும், அப்பகுதியில் ஆட்டோ தொழிலாளர்கள் இரு தரப்பினர் இடையே மோதல் நிலவும் போக்கு ஏற்பட்டது.தகவல் அறிந்த சாலவாக்கம் போலீசார் அப்பகுதிக்கு வந்து சமரச பேச்சில் ஈடுபட்டு, முறையாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
02-Nov-2024