மேலும் செய்திகள்
உயர் ரத்த அழுத்த தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
11-Jun-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உள்ள அவ்வை செவிலியர் கல்லுாரி மாணவியருக்கு, ரத்த அழுத்த பரிசோதனை செய்யும் பயிற்சி மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.பஞ்சுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அபர்னா, அவ்வை செவிலியர் கல்லுாரி முதல்வர் அமீதா நாசர் ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.இதில், உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான காரணம், வராமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்து மருத்துவர் அபர்னா விளக்கவுரையாற்றினார்.உப்பேரி குளம் நகர்ப்புற நலவாழ்வு மைய மருத்துவர் விஜயகுமார், ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யும் வழிமுறையை செவிலியர் மாணவியருக்கு பயிற்றுவித்தார்.இந்நிகழ்ச்சியில், 50 செவிலியர் கல்லுாரி மாணவியர், நகர சுகாதார ஆய்வாளர்கள், தன்னார்வ பெண் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
11-Jun-2025