வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நல்லது. அதேபோல் வண்டி எப். சி, புது வண்டி பதிவு முதலியாவைளை ஆய்வு செவ்வது மோட்டார் வாகன ஆய்வாளர்களின் பணிதான். அதனை லஞ்சம் வாங்காமல், ஏஜென்ட்கள் நுழையாமல் செய்ய இவர்களுக்கு யார் பாடம் எடுப்பது?
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற மற்றும் இதர பணிகளுக்காக வந்தவர்களுக்கு வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், விபத்தில்லாமல் வாகனங்களை இயக்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இதில், இருசக்கர மோட்டார் வாகனங்களை ஓட்டும்போது தலைகவசம் அணிவதன் அவசியம், நான்குசக்கர வாகனங்களை ஓட்டும் போது சீட் பெல்ட் அணிவதன் அவசியம், சாலையில் நடந்து செல்லும் போது விபத்தில் சிக்காமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய சாலை விதிமுறைகள் ஆகியவை குறித்து ப்ரஜக்டர் வாயிலாக விழிப்புணர்வு நடத்தினார். தொடர்ந்து இரண்டு மணிநேரம் நடந்த இப்பயிற்சியில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.காஞ்சிபுரம் வட்டார அலுவலகத்திற்கு ஓட்டுநர் உரிமத்திற்காக வந்தவர்களுக்கு, மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நல்லது. அதேபோல் வண்டி எப். சி, புது வண்டி பதிவு முதலியாவைளை ஆய்வு செவ்வது மோட்டார் வாகன ஆய்வாளர்களின் பணிதான். அதனை லஞ்சம் வாங்காமல், ஏஜென்ட்கள் நுழையாமல் செய்ய இவர்களுக்கு யார் பாடம் எடுப்பது?