உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி --- பம்பைக்கு அரசு பஸ்கள் அய்யப்ப பக்தர்கள் வலியுறுத்தல்

காஞ்சி --- பம்பைக்கு அரசு பஸ்கள் அய்யப்ப பக்தர்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், சபரிமலைக்கு குழுவாக செல்ல டூரிஸ்ட் பேருந்து, கார், வேன், ரயில் வாயிலாக சென்று வருகின்றனர்.இவ்வாறு செல்ல இயலாதவர்கள், சென்னை அல்லது திருச்சிக்கு பேருந்தில் சென்று அங்கிருந்து, மற்றொரு பேருந்து வாயிலாக சபரிமலைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், பயண நேரம் அதிகரிப்பதுடன், கூடுதல் பணமும் செலவாகிறது.எனவே, காஞ்சிபுரத்தில் இருந்து, சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், தேனி, கம்பம், குமுளி வழியாக பம்பைக்கு செல்லும் வகையில், சிறப்பு பேருந்து இயக்க அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அய்யப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை