உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அய்யப்ப பக்தர்களின் விளக்கு பூஜை

அய்யப்ப பக்தர்களின் விளக்கு பூஜை

காஞ்சிபுரம்: கொட்டவாக்கம் கிராமத்தில், அய்யப்ப பக்தர்களின் திருவிளக்கு பூஜை விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, கொட்டவாக்கம் கிராமத்தில், அய்யப்ப பக்தர் சபா சார்பில், விளக்கு பூஜை நடந்தது. இந்த பூஜைக்கு, ஸ்ரீலஸ்ரீ சண்முகம் குருசாமியின் சீடர்கள் செல்வம், மனோகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள் பஜனை பாடல்களை பாடினர். நள்ளிரவு, 12:00 மணிக்கு ஜோதி தரிசனம் குருசாமிகள் காண்பித்தனர். இதையடுத்து, அன்னதானம் மற்றும் பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது. இந்த விளக்கு பூஜையில், காஞ்சிபுரம், கொட்டவாக்கம், போந்தவாக்கம், சிறுவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி