மேலும் செய்திகள்
பலா மரங்கள் இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்!
07-Mar-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவு, திருவீதிபள்ளம் பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.இங்குள்ள மட்கும் குப்பை, மட்காத குப்பை தரம் பிரிக்கும் ஒரு கிடங்கின் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மூங்கில் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.இதில், பல மரங்கள் 15 - 20 அடி உயரத்திற்கு மேல் நன்கு செழித்து வளர்ந்து வந்துள்ளன.இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், பல மூங்கில் மரங்கள் கருகி வருகின்றன. எனவே, கார்பன்டைஆக்சைடை கிரகித்துக் கொள்ளும் மூங்கில் மரங்களை முறையாக பராமரிக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
07-Mar-2025