கோவில் மண்டபத்திற்கு பூமி பூஜை
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் கிராமத்தில், ஹிந்து அறநிலைய துறை ஆய்வாளர் கட்டுப்பாட்டில், சந்தியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் முகப்பு மண்டபம் கட்டும் பணி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, சிவாச்சாரியார் பூமி பூஜை போட்டு, அடிக்கல் நாட்டும் பணியை துவக்கி வைத்தார். இதில், தேவரியம்பாக்கம் கிராமவாசிகள் மற்றும் ஹிந்து அறநிலையத் துறையினர் பங்கேற்றனர்.