உண்டியல் வருவாய் ரூ.57.31 லட்சம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வாயிலாக எண்ணப்பட்டு வருகிறது.அதன்படி, கோவிலில் உள்ள உண்டியல்கள், கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், கோவில் ஸ்ரீகார்யம் சுந்தரேச ஐயர், மணியகாரர் சூரியநாராயணன், சரக ஆய்வர் அலமேலு உள்ளிட்டோர் முன்னிலையில், நேற்று திறக்கப்பட்டு, பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வாயிலாக எண்ணப்பட்டது.இதில், 57 லட்சத்து 31 ஆயிரத்து 782 ரூபாயும், 178 கிராம் தங்கமும், 611 கிராம் வெள்ளியும் வருவாயாக கிடைத்துள்ளது என, கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.