மேலும் செய்திகள்
வாலிபர் அடித்து கொலை செங்குன்றத்தில் 3 பேர் கைது
24-Jul-2025
செங்குன்றம்,மதுபோதை தகராறில், நண்பர்களால் சிறுவன் அடித்து கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர். செங்குன்றம் அடுத்த தர்காஸ் பகுதியில் உள்ள மரத்தில், சிறுவன் உடல் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளதாக, செங்குன்றம் போலீசாருக்கு, நேற்று காலை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்தவர் திருவள்ளூர் மாவட்டம் பெரிய பாளையம் அடுத்த நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ், 17, என்பது தெரியவந்தது. இவர், பணப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. செங்குன்றம், மல்லிமாநகர் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் நடந்த மது விருந்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜேஷ் பங்கேற்றுள்ளார். அதில் ஏற்பட்ட தகராறில் ராஜேஷ் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காயங்களுடன் இருந்த ராஜேஷின் உடையில் ரத்தக்கறைகளும் இருந்துள்ளன. மதுபோதை தகராறில், சிறுவன் அடித்து கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணமா என, செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Jul-2025