மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
24-Jun-2025
காஞ்சிபுரம்,:லாரி மீது சரக்கு வாகனம் மோதியில் கிளீனராக வேலை பார்த்த சிறுவன் இறந்தார்.மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு, 34. இவர், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுச்செட்டிச்சத்திரத்தில் உள்ள பிராய்லர் கோழி கடையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரிடம் கோகுல்ராஜ், 17 என்ற சிறுவன் கிளீனராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, டில்லிபாபு பொலிரோ வாகனத்தை சென்னை நோக்கி ஓட்டிச்சென்றார். பாலுச்செட்டிச்சத்திரம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது, பொலிரோ வாகனம் மோதியது. இதில், பொலிரோ வாகனத்தில் இருந்த கிளீனர் கோகுல்ராஜ், பலத்த காயமடைந்து இறந்தார்.இதுகுறித்து, பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.
24-Jun-2025