உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கலெக்டர் வளாக கேட் விழுந்து சிறுவன் காயம்

கலெக்டர் வளாக கேட் விழுந்து சிறுவன் காயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில், விடுமுறை நாட்களில் இளைஞர்கள், குழந்தைகள் கிரிக்கெட், இறகுபந்து போன்ற விளையாட்டுகளை விளையாடுவது வழக்கம். அந்த வகையில், கலெக்டர் அலுவலக வளாக மைதானத்தில் நேற்றும் குழந்தைகள் விளையாடி உள்ளனர். அப்போது, சாய்சரண், 12. என்ற சிறுவன், அங்கிருந்த இரும்பு கேட் ஒன்றின் மீது ஏறியதாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென கேட் சாய்ந்து சிறுவன் மீது விழுந்துள்ளது. இதில், சிறுவனுக்கு நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்தனர். மருத்துவ பணியாளர், சிறுவனுக்கு முதலுதவி அளித்தார். லேசான காயம் என்பதால், மருத்துவமனை வர சிறுவன் மறுத்ததால், அவரை அங்கிருந்தவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ