உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் கல்லால் அடித்து கொலை

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் கல்லால் அடித்து கொலை

ஸ்ரீபெரும்புதுார்,:ஸ்ரீபெரும்புதுார் அருகே, பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த, ஐந்து வயது சிறுவனை, கல்லால் அடித்து கொலை செய்து, முட்புதரில் வீசிய வடமாநில இளைஞனை போலீசார் நேற்று கைது செய்தனர்.பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் நீரஜ் குமார், 30. இவர், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வடமங்கலம் ஊராட்சி, கருமாங்கழனி கிராமத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்தார். இவரது மனைவி காஜல் குமாரி, மகன் ஆரவ்குமார, 5.இந்த நிலையில், கடந்த 9ம் தேதி, ஆரவ்குமார் காணாமல் போனதை அடுத்து, சிறுவனின் பெற்றோர் ஸ்ரீபெரும்புதுார் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து சிறுவனை தேடிவந்த நிலையில், 15ம் தேதி அதே பகுதியில் உள்ள முட்புதரில் அழுகி நிலையில் சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.சிறுவனின் தலையில் காயம் இருந்தை அறித்த போலீசார், பிரேத பரிசோதனைக்கு உடலை அனுப்பிவைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். சிறுவன் காணாமல் போன தேதி அன்று, அதே பகுதியில் தங்கியுள்ள அசாம் மாநிலத்தை சேர்ந்த போல்தேவ் என்பவர், சிறுவனை அழைத்து சென்றது, அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவானது.இதையடுத்து, போலீசார் போல்தேவை நேற்று கைது செய்து விசாரித்தனர்.விசாரணையில், ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை அழைத்து சென்றது, அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமராவில், பதிவானது.இதையடுத்து, போலீசார் போல்தேவை, நேற்று பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ஒரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை, கல்லால் தலையில் அடித்து கொலை செய்து, முட்புதரில் வீசி சென்றதை போல்தேவ் ஒப்புக்கொண்டார்.இதையடுத்து, போலீசார் போல்தேவ், 23, கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை