உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு போராட்டம்

விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு போராட்டம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஓரிக்கை, பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் கலாக்ஷே்த்ரா மெட்ரிக் பள்ளி ஆகிய இரு பள்ளிகளில், பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் மையங்களாக இயங்கி வருகின்றன.நேற்று, காலை 10:00 மணி முதல், 11:00 மணி வரையில் விடைத்தாள் திருத்தும் பணியை ஒரு மணி நேரம் புறக்கணித்துவிட்டு முதுகலை ஆசிரியர்கள் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.இந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக காஞ்சிபுரம் மாவட்ட செயலர் அருள்தாஸ் தலைமை வகித்தார்.பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட தலைவர் தேவராஜன் வலியுறுத்தினார்.இதில், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் பலர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ