உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கார் மோதி கொத்தனார் பலி

கார் மோதி கொத்தனார் பலி

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை 57. கொத்தனார். இவர் நேற்று முன்தினம் வாலாஜாபாத் அடுத்த புளியம்பாக்கத்தில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு சென்றார்.அங்கிருந்து மாலை 6:30 மணிக்கு, புளியம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, வாலாஜாபாத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த ரெனால்ட் கார் தங்கதுரை மீது மோதியது.அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். வாலாஜாபாத் போலீசார், உடலை செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ