உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பிரதான குழாயில் உடைப்பு கீழ்கதிர்பூரில் வீணாகும் குடிநீர்

பிரதான குழாயில் உடைப்பு கீழ்கதிர்பூரில் வீணாகும் குடிநீர்

கீழ்கதிர்பூர், ஜூலை 29-கீழ்கதிர்பூர் புறவழிச்சாலையில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற் பட்டுள்ளதால், ஒரு மாதமா க குடிநீர் வீணாகி வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி, 51 வார்டுகளில், 1,060க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இப் பகுதியில் வசிப்போருக்கு பாலாறு, திருப்பாற்கடல் மற்றும் வேகவதி ஆற்றங்கரையில், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, நிலத்தடி கு ழாய் மூலம், மாநகராட்சி சார்பில், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் , திருப்பாற்கடலில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு நிலத்தடி வழியாக செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கீழ்கதிர்பூர் புறவழிச் சாலையில் ஒரு மாதமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால், காஞ்சிபுரத்திற்கு குடிநீர் முழுமையாக செல்லாத நிலை உள்ளது. மேலும், நீண்டநேரம் இயங்கும் மின்மோட்டாரும், பழுதடையும் சூழல் உள்ளதோடு, மின்சாரம் விரயமாவதுடன், மின்வாரியத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் கூடுதலாக மின்கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. தொடர்ந்து வெளியேறும் குடிநீரால், மண் அரிப்பு ஏற்பட்டு கீழ்கதிர்பூருக்கு செல்லும் சாலையும் சேதமாகிறது. எனவே, கீழ்கதிர்பூர் புறவழிச் சாலையில், குடிநீர் குழாயில் ஏற் பட்டுள்ள உடைப்பை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியில் வசிப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை