உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  மின் விளக்கின்றி பஸ் நிறுத்தம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

 மின் விளக்கின்றி பஸ் நிறுத்தம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம்: பெரியகரும்பூர் கிராம பேருந்து நிறுத்தம் அருகே, மின் விளக்கு வசதி இல்லாததால், சமீபத்தில் அப்பகுதியில் வாகன விபத்து அரங்கேறியுள்ளது. எனவே, மின் விளக்கு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வரையில், 85 கி.மீ., இருவழி சாலை உள்ளது. இந்த இருவழி சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. காஞ்சிபுரம் - -அரக்கோணம் இடையே விரிவுபடுத்தப்பட்டுள்ள நான்குவழி சாலை ஓரத்தில் இருக்கும் வெள்ளைகேட், கூரம்கேட், புதுப்பாக்கம், வேளியூர், ஊவேரி, பள்ளூர், சேந்தமங்கலம், மஞ்சம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராம பேருந்து நிறுத்தங்கள் அருகே, மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், பெரியகரும்பூர் பேருந்து நிறுத்தம் மற்றும் விஷகண்டிகுப்பம் அருகே மின் விளக்கு அமைக்கவில்லை. இதனால், அப்பகுதியில் வாகன விபத்து ஏற்படுகிறது. சமீபத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவர் உயிரிழந்தனர். இருளில் மீட்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. எனவே, பெரியகரும்பூர் பேருந்து நிறுத்தம் அருகே, மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை