உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சமையல் உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

சமையல் உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், பள்ளிகளில் காலியாக உள்ள 74 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. ஒன்றியம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் மாதிரி விண்ணப்ப படிவங்கள், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம், அனைத்து ஒன்றிய மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் தகவல் பலகையில் ஒட்டப்படும்.விண்ணப்பங்களை https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படும் சத்துணவு சமையல் உதவியாளர்கள், தொடர்ந்து 12 மாத காலம் பணி முடித்தபின், அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவர்.விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட துாரம் 3 கி.மீ.,க்குள் இருக்க வேண்டும் எனவும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, இம்மாதம் 26ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !