உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வல்லப்பாக்கத்தில் கால்வாய் ஆக்கிரமிப்பு

வல்லப்பாக்கத்தில் கால்வாய் ஆக்கிரமிப்பு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி, 5வது வார்டில் வல்லபாக்கம் பகுதி உள்ளது. இங்குள்ள அபிராமி நகர், மாரியம்மன் கோவில் தெருவில், கால்வாய் பகுதியை சிலர் துார்த்து தங்கள் வீட்டு மனையோடு சமன் செய்துள்ளனர்.இதனால், மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற வழி இல்லாமல் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து கொள்ளும் நிலை உள்ளது. கால்வாய் ஆக்கிரமிப்பால், பெருமழை நேரங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.எனவே, வல்லப்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றி இருபுறமும் கால்வாய் வசதி ஏற்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !