உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விபத்தில் கனரா வங்கி மேலாளர் பலி

விபத்தில் கனரா வங்கி மேலாளர் பலி

ஸ்ரீபெரும்புதுார்;சுங்குவார்சத்திரம் அருகே, பைக் மீது லாரி மோதிய விபத்தில் வங்கி மேலாளர் உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, நெமிலியைச் சேர்ந்தவர் யுவசங்கர், 32; பேரம்பாக்கம் அருகே, துளசாபுரத்தில் உள்ள கனரா வங்கியில் மேலாளராக வேலை செய்து வந்தார். நேற்று காலை, 'சுசூகி ஜிக்ஸர்' பைக்கில் வீட்டில் இருந்து வங்கிக்கு புறப்பட்டார். சென்னை -- பெங்களூரு தேசிய நெடுங்சாலையில், சுங்குவார்சத்திரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே, இடது புறம் சர்வீஸ் சாலையில் திருப்பிய போது, பின்னால் வந்த லாரி மோதியது. இதில், யுவசங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை