மேலும் செய்திகள்
அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பெரும் அமளி
19-Dec-2024
காஞ்சிபுரம்:மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்யசபாவில் அம்பேத்கர் பற்றி பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. காஞ்சிபுரத்தில், வி.சி., கட்சி சார்பில், தாலுகா அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, அமித் ஷாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, உருவ பொம்மையை எரித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முறையாக போலீசாரிடம் அனுமதி பெறாமல், வி.சி.,வினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இதற்காக, நான்கு பிரிவுகளின் கீழ், 97 பேர் மீது விஷ்ணுகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
19-Dec-2024