திட்ட பணிகள் ஆய்வுக்கு மத்திய குழு காஞ்சி வருகை
காஞ்சிபுரம்: மத்திய, மாநில அரசு திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக, மத்திய செயலாக்க குழுவினர், ஐந்து நாள் பயணமாக காஞ்சிபுரத்திற்கு நேற்று வந்துள்ளனர். காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், மத்திய அரசின் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், பிரதமர் வீடு வழங்கும் திட்டம் மற்றும் மாநில அரசின் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன. இந்த திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக, மத்திய அரசின் செயலாக்க துறையினர், ஐந்து நாள் பயணமாக நேற்று காஞ்சிபுரம் வந்தனர். நவ.,3 வரை பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளனர். இந்த திட்ட பணிகளின் முன்னேற்றம், நிதி கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய உள்ளனர்.