உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் வரும் 31ல் செஸ் போட்டி

காஞ்சியில் வரும் 31ல் செஸ் போட்டி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பல்லவா சதுரங்க சபா சார்பில், மாவட்ட அளவில் பள்ளி மாணவ - மாணவியருக்கான செஸ் போட்டி வரும் 31ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் பல்லவா சதுரங்க சபா சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், பொது பிரிவினருக்கு என, குறு வட்டம், மண்டலம், மாவட்டம், மாநில அளவில் பல்வேறு செஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, பள்ளி மாணவ - மாணவியருக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி, வரும் 31ம் தேதி, காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இதில், 9, 11, 13, 17 வயதுடைய பள்ளி மாணவ - மாணவியர் என, ஒவ்வொரு பிரிவிலும், ஆண்கள், பெண்கள் என, தனித்தனியாக போட்டி நடைபெற உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுவோருக்கு, பரிசும், கோப்பையும், போட்டியில் பங்கேற்பவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 99942 93081, 95002 34581 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் பல்லவா சதுரங்க சபா, காஞ்சிபுரம் மாவட்ட சதுரங்க கழக செயலர் வி.ஜோதிபிரகாசம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ