உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாடாதவூர் கோவிலில் துாய்மை பணி

வாடாதவூர் கோவிலில் துாய்மை பணி

உத்திரமேரூர்:வாடாதவூர் கைலாச நாதர் கோவிலில் துாய்மை பணி நடந்தது.நெடுங்குன்றம் சிவலோக நாயகன் உழவாரப் பணி மன்றம் சார்பில், மாதந்தோறும், நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில், ஹிந்து கோவில்களில் துாய்மை பணி மேற் கொள்வது வழக்கம். அதன்படி, உத்திரமேரூர் தாலுகா, வாடாதவூர் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் துாய்மை பணியில் ஈடுபட்டனர். அதில், கோவில் வளாகத்தில் உள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டன. பின், சுவாமி சிலைகள் மற்றும் அபிஷேக நீர் செல்லும் பாதையும் சுத்தம் செய்யப்பட்டது. இதில், சிவலோக நாயகன் உழவாரப் பணி மன்ற தலைவர் விஜயா சுவாமிநாதன், சிவனடியார்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ