புதிய அரசு அருங்காட்சியக பணி விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுரை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பழைய ரயில்வே சாலையில் உள்ள, தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில் இயங்கி வந்த அரசு அருங்காட்சியகம் ஒலிமுகமதுபேட்டையில் 2 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டட பணிகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கட்டட பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார்.தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சேக்குப்பேட்டை சாலியர் தெருவில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையையும், கலெக்டர் கலைச்செல்வி பார்வையிட்டு, பொருட்களின் இருப்பு பதிவேட்டை ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் இயங்கிவரும் முதல்வர் மருந்தகத்தை பார்வையிட்டு, விபரம் கேட்டறிந்தார்.நிகழ்வின்போது குடிமை பொருள் வழங்கல் துறை தனி தாசில்தார், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அரசு அருங்காட்சியகம் அலுவலர்கள்உடனிருந்தனர்.