உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து மானியத்தில் பெற கலெக்டர் அழைப்பு

கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து மானியத்தில் பெற கலெக்டர் அழைப்பு

காஞ்சிபுரம்:'கறவை மாடுகளுக்கு, 50 சதவீத மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தில் பயன் பெற, உத்திரமேரூர் கால்நடை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்' என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும் கால்நடைகளுக்கு 50 சதவீத மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் உள்ளது. அந்த வகையில், முதற்கட்டமாக உத்திரமேரூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கறவை மாடுகளுக்கு, 360 கிலோ ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட உள்ளது. மேலும், 4 கிலோ தாது உப்பும், 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இந்த மானியத்தை பெற, தமிழ்நாடு பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். பெண்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். திட்டத்தில் 30 சதவீதம் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். உள்ளூர் கால்நடை மருந்தகம் அல்லது பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு உதவி இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் காஞ்சிபுரம் மண்டல இணை இயக்குநர் அலுவலகங்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி