விபத்தில் கல்லுாரி மாணவர் பலி போட்டோ சூட்டால் விபரீதம்
குன்றத்துார்:செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நந்திவரம் பகுதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு, 19. இவர், சேலையூரில் உள்ள தனியார் கல்லுாரியில், கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, நண்பரிடம் 'யமஹா கே.டி.எம்.,' ரக பைக்கை வாங்கிக் கொண்டு, ஹரி என்பவருடன் 'போட்டோ சூட்' எடுக்க சென்றார்.வண்டலுார் - -மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், சோமங்கலம் அருகே, எருமையூர் பகுதியைக் கடந்த போது, அவ்வழியே சென்ற மற்றொரு பைக் மீது மோதி, இவர்கள் இருவரும் கீழே விழுந்துள்ளனர்.இதில், டில்லிபாபு பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.ஹரி காயங்களுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.