உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிருபானந்த வாரியார் குரு பூஜை விமரிசை

கிருபானந்த வாரியார் குரு பூஜை விமரிசை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், திருவேகம்பன் தெருவில் உள்ள கன்னியம்மன் கோவிலில் திருமுருக கிருபானந்த வாரியார் மஹா குரு பூஜை விழா நேற்று நடந்தது.விழாவையொட்டி, காலை 9:00 மணிக்கு தெய்வத் திருமுறை இசை நிகழ்ச்சியும், தொடர்ந்து வாரியார் பெருமை என்ற தலைப்பில், திருமுருக கிருபானந்த வாரியார் குருபூஜை அன்னதான புரவலர் சந்தானம் சொற்பொழிவாற்றினார்.காலை 10:30 மணிக்கு வாரியார் விருது வழங்கும் நிகழ்வு நடந்து. காலை 11:00 மணிக்கு திருமுருக கிருபானந்த வாரியாருக்கு பல்வேறு மலர்களால் புஷ்பாஞ்சலியும், தொடர்ந்து மஹா தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கும் நிகழ்வும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ