உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 174 கர்ப்பிணியருக்கு சமுதாய வளைகாப்பு

174 கர்ப்பிணியருக்கு சமுதாய வளைகாப்பு

வாலாஜாபாத்:வாலாஜாபாதில், சமூக நலன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், கர்ப்பிணியருக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது.இதில், வாலாஜாபாத் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 174 கர்ப்பிணியர் பங்கேற்றனர். கர்ப்பிணியர்களுக்கு தாம்பூலத்தட்டு, வளையல், புடவை, குங்குமம், மஞ்சள், வாழைப்பழம், உலர் திராட்சை, பேரிச்சம்பழம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட பொருட்கள் அளித்து, பூமாலை அணிவித்து மங்கல சீர்வரிசை வழங்கப்பட்டது.உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் ஆகியோர் பங்கேற்று அச்சீர்வரிசைகளை வழங்கினர்.அதை தொடர்ந்து காப்பிணியருக்கு நலங்கு வைத்து வளைகாப்பு நடத்தப்பட்டது. கர்ப்ப காலத்தில் பெண்கள் உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள், காய்கறிகள், தானிய வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் கண்காட்சியும் நடந்தன.உத்திரமேரூர் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன், துணை தலைவர் சேகர் மற்றும் பேரூர் தி.மு.க., செயலர் பாண்டியன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பேசினர். வாலாஜாபாத் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் இந்திரா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை