புகார் பெட்டி உடையும் நிலையில் மின்கம்பம்
உடையும் நிலையில் மின்கம்பம்காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், இருளர் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு, மின் இணைப்பு வழங்க மின் வாரிய அதிகாரிகள் ஒரு சிமென்ட் மின் கம்பத்தை நட்டுள்ளனர்.இந்த மின் கம்பத்தின் சிமென்ட் காரைகள் உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டு, எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது.பலமாக காற்று அடித்தால், மின் கம்பம் முறிந்து, குடிசை வீடுகள் மீது விழுந்து, மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.-ஜெ. தனசேகரன்கோவிந்தவாடி