உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புகார் பெட்டி : குரங்குகளை பிடிக்க நடவடிக்கை வேண்டும்

புகார் பெட்டி : குரங்குகளை பிடிக்க நடவடிக்கை வேண்டும்

உ த்திரமேரூர் தாலுகா, திருமுக்கூடல் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள தெருக்களில் குரங்குகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. குடியிருப்புகளில் குரங்குகள் புகுந்து உணவு பொருட்களை நாசம் செய்கின்றன. சாலையில் நடந்து செல்லும் மக்களை அச்சுறுத்தி, அவர்கள் வைத்துள்ள பொருட்களை பிடுங்கி செல்கின்றன. குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் உள்ள மரங்களையும் சேதப்படுத்துகின்றன. எனவே, திருமுக்கூடல் கிராமத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குரங்குகளை பிடிக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -- எஸ்.சுந்தர்ராமன், திருமுக்கூடல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை