உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தலை சாய்ந்த சிசிடிவி கேமரா:சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

தலை சாய்ந்த சிசிடிவி கேமரா:சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் - சாலவாக்கம் சாலையில் அருங்குன்றம் கிராமம் உள்ளது. அருங்குன்றம் வழியாக சுற்றி உள்ள பகுதி மக்கள், சாலவாக்கம், உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இச்சாலையில், அருங்குன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே பேருந்து நிறுத்தம் பகுதியில், ஊராட்சி சார்பில், 'சிசிடிவி' கேமரா அமைக்கப்பட்டு குற்ற சம்பவங்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் வேகமாக வீசிய சூறை காற்றால், கேமரா பொருத்தப்பட்டுள்ள இரும்பு பைப் சரிந்து 'சிசிடிவி' கேமரா தலை சாய்ந்துள்ளது. எனவே, கேமரா பொருத்தப்பட்டு சாய்ந்த இரும்பு பைப்பை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். - எஸ். ஜானகிராமன், பட்டா கிராமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !