மேலும் செய்திகள்
அறுந்த மின் கம்பியில் சிக்கி 9 எருமை மாடுகள் பலி
27-Oct-2024
உத்திரமேரூர்:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம், 58; இவர், செங்கல்பட்டு அரசு போக்குவரத்து பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் செங்கல்பட்டில் இருந்து, சாலவாக்கம் வழியாக சித்தனக்காவூர் வரை இயங்கும் அரசு பேருந்தில் பணியில் இருந்தார்.அன்று இரவு, 10:00 மணிக்கு, சித்தனக்காவூரில் பயணியரை இறக்கிவிட்டு, வழக்கம்போல பேருந்திலேயே படுத்து துாங்கினார்.நேற்று அதிகாலை, அப்பேருந்தின் ஓட்டுனர் ரவிக்குமார் என்பவர், எழுந்து பார்த்தபோது, செல்வம் வாயில் நுரை தள்ளியபடி இருந்துள்ளார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் அவரை பரிசோதித்தனர். செல்வம் ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது.இதுகுறித்து சாலவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Oct-2024