உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளியகரம் நெடுஞ்சாலையில் மையத்தடுப்பு அமைக்கும் பணி

பள்ளியகரம் நெடுஞ்சாலையில் மையத்தடுப்பு அமைக்கும் பணி

உத்திரமேரூர்:பள்ளியகரம் பகுதியில் நடந்து வரும் நெடுஞ்சாலை விரிவாக்க பணியில் மையத் தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகின்றன.புக்கத்துறை -- மானாம்பதி நெடுஞ்சாலை 32 கி.மீ., துாரமுடையது. இருவழிச் சாலையாக இருந்த இச்சாலையில் போதிய இடவசதி இல்லாமல், வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தன.இதனால், இச்சாலையை நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2021 -- -22ம் நிதி ஆண்டில், முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக புக்கத்துறை முதல், நடராஜபுரம் மற்றும் உத்திரமேரூர் முதல், மீனாட்சி கல்லுாரி வரை, மொத்தம் 7.2 கி.மீ., துாரம், 54.3 கோடி ரூபாய் செலவில் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.அதை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, வேடபாளையம் முதல், அம்மையப்பநல்லுார் வரை, 1.5 கி.மீ., துாரம், 16 கோடி ரூபாய் செலவிலும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.இந்நிலையில், மூன்றாம் கட்டமாக பள்ளியகரம் முதல், மங்கலம் வரை, 3 கி.மீ., துாரம், 22.75 கோடி ரூபாய் செலவில், சாலை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத் துறையினரால் முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.தற்போது, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, 13 பாலங்கள் கட்டும் பணியும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதை தொடர்ந்து, சாலையில் மையத் தடுப்பு அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ